என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விமான தாக்குதல்
நீங்கள் தேடியது "விமான தாக்குதல்"
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடந்த விமான தாக்குதலில் 2 கேரள வீரர்கள் முக்கிய பங்காற்றினர். #IAFStrike
திருவனந்தபுரம்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது.
ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடந்த துல்லிய தாக்குதலுக்கு கேரளாவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கனூரை அடுத்த பாண்டநாடு கிராமத்தைச் சேர்ந்த ஏர்மார்ஷல் ஹரிகுமார், கண்ணூர் மாவட்டம் கடச்சிராவைச் சேர்ந்த ஏர்மார்ஷல் ரகுநாத் நம்பியார் இருவரும் இந்திய ராணுவத்தின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளின் கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர்.
பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க உத்தரவு கிடைத்ததும், அதனை மிகவும் சாமர்த்தியமாக நடத்திக்காட்டி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
ஏர்மார்ஷல் ஹரிகுமார், 1979-ம் ஆண்டிலிருந்து விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பரம் விஷிஸ்டு சேவா மெடல், அதி விஷிஸ்டு சேவா மெடல், வாயுசேனா மெடல், விஷிஸ்டு சேவா மெடல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
ரகுநாத் நம்பியார், 1981-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேஷனல் டிபென்ஸ் அகாடமியில் படித்து ராணுவத்தில் இணைந்தவர் ஆவார். #IAFStrike

ஏமன் நாட்டில் 40 குழந்தைகள் உள்பட 51 உயிர்களை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன. #Saudiledcoalition #Yemenbusstrike
ரியாத்:
ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல மார்க்கெட் பகுதியின் மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்தனர்.
குழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருந்தது.
இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதற்காக இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். #Saudiledcoalition #Yemenbusstrike
×

X